என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலத்தில் 2வது மனைவிக்கு கத்திக்குத்து-கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் 2வது மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
  சேலம்:

  சேலம் குகை ஆண்டிபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன் (வயது 47). கூலி தொழிலாளியான இவருக்கு குட்டி (வயது 42), புஷ்பா (40) என்ற 2 மனைவிகள் உள்ளனர்.

  இன்று காலை ஜானகிராமன் தனது மனைவி புஷ்பாவுடன் பிரபாத் சிக்னல் அருகே உள்ள என்.எஸ்.ஆர் செட் பகுதியில் நடந்து சென்றார்.
  அப்போது அவர்களுக்கிடையே  தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜானகிராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பாவின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தினார்.

  இதனால் நிலைகுலைந்து போன புஷ்பா வலியால் அலறி துடித்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக புஷ்பாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு புஷ்பா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ஜானகிராமன் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×