என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் பலியானார்.
    சேலம்:

     
    சேலம் சின்னதிருப்பதி ராஜாநகர் பகுதியை சேர்ந்தவர்  பலராமன் (வயது 50). இவர் நேற்றிரவு சேலம் மத்திய சிறை அருகே அஸ்தம்பட்டி நோக்கி   மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

     அப்போது   அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள்  ஏறி, இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் காயம் அடைந்து  அவர் உயிருக்கு போராடினார். 

    தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் அவரை மீட்டு  சேலம்   அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பலராமன்  இன்று அதிகாலை   பரிதாபமாக இறந்தார்.  

    சம்பவம்    குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். பலராமன் செல்போன் பேசிய படியே  மோட்டார்  சைக்கிள் ஓட்டி வந்ததாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே   விழுந்ததால் காயம் அடைந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.   இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   


    Next Story
    ×