என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கிய அரசு பஸ்
    X
    விபத்தில் சிக்கிய அரசு பஸ்

    லாரி டிரைவர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே லாரி டிரைவர் விபத்தில் பலியானார்
    ஆண்டிபட்டி:

    திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு அரசு பஸ் வந்தது. சுமார் 40 பயணிகள் அதில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது காளவாசலுக்கு மண் ஏற்றிவந்த டிப்பர் லாரி திடீரென தேனி&மதுரை சாலையை கடக்க முயன்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியது.  இதில் லாரி டிரைவர் வைகை அணை கன்னியமங்கலத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 35). சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அரசு பஸ் டிரைவர் குள்ளபுரத்தைச் சேர்ந்த குமார் (45), கண்டெக்டர் வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் ஆண்டிபட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×