என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சமூக நலத்துறை சார்பில் ஒப்பந்த பணிக்கு ஆட்கள் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  திருப்பூர்:

  தற்காலிகமாக ஒப்பந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை அறிவித்துள்ளது. சமூக நலத்துறை சார்பில் இயங்கும் பெண்களுக்கான சேவை மையத்தில் களப்பணியாளர்-4, பல்நோக்கு உதவியாளர் -1, பாதுகாவலர் மற்றும் டிரைவர் -1 என 6  தற்காலிக ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எம்.எஸ்.டபிள்யூ., முதுகலை பட்டம் பெற்றவர் களப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  வருகிற 25-ந் தேதி மாலை 5மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் 35 மற்றும் 36ம் எண் அறைகளில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் 0421 - 2971168 என்ற எண்களிலும், dswo.tpr@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  Next Story
  ×