என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சுத்திகரிப்பு மையம் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை
Byமாலை மலர்13 Jan 2022 1:12 PM IST (Updated: 13 Jan 2022 1:12 PM IST)
சாய ஆலைகள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,வரி, திரும்ப பெறமுடியாமல் அரசிடம் தேக்கமடைகிறது. அந்த வகையில் 200 கோடி ரூபாய் திரும்ப பெறப்படாமல் அரசிடம் தேங்கியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கதலைவர் காந்திராஜன், பொதுச் செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜியுடன் சென்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து ஆலைகள், சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. சாயமேற்றும் கட்டணத்துக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி சுத்திகரிப்பு மையங்களுக்கு, 12 சதவீத வரி நடைமுறையில் உள்ளது.
அதனால், சாய ஆலைகள் செலுத்தும் ஜி.எஸ்.டி.,வரி, திரும்ப பெறமுடியாமல் அரசிடம் தேக்கமடைகிறது. அந்த வகையில் 200 கோடி ரூபாய் திரும்ப பெறப்படாமல் அரசிடம் தேங்கியுள்ளது.
சாய கட்டணம் மீதான ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதமாக உயர்த்த மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, சாய ஆலைக்கான வரியை, 12 சதவீதமாக உயர்த்தி, விரைந்து அமல்படுத்த வேண்டும்.
அல்லாத பட்சத்தில் சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்களை, சேவை துறையிலிருந்து, ஜாப்ஒர்க் ஆக மாற்ற வேண்டும். சுத்திகரிப்புகட்டணம் மீதான வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×