என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் வகுப்பு
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாமா?- கல்வித்துறை ஆலோசனை
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாமா? என்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என்ற அறிவுறுத்தலை ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்வைத்தனர்.
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாமா? என்பது பற்றி கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் நேற்று வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வரவில்லை. அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டாலும், பொங்கல் விடுமுறைக்கு பிறகே, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Next Story