என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரூ.8.53 லட்சம் உண்டியல் வசூல்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டதில் ரூ.8.53 லட்சம் வசூலாகியிருந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடந்தது.
கோவிலில் இருந்த 3 உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை நடந்த இந்த பணியின் முடிவில், மொத்தம் 8 லட்சத்து 53 ஆயிரத்து 602 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story