search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஆஸ்பத்திரி ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஆஸ்பத்திரி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவடி:

    சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு மோட்டார் சைக்கிளில் மணவாளநகரில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திருநின்றவூர் அருகே மேம்பாலத்தில் வந்த போது, மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையின் உணவு கூடத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் தீபக் கோல்ட் (வயது 25). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், கும்மிடிப்பூண்டி பஜார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×