என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்.
    X
    மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்.

    வேதாரண்யம்-மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

    வேதாரண்யத்தில் மீன்பிடிக்க மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம், வணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் முழு ஊரடங்கை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க 
    கடலுக்கு செல்லவில்லை. 

    இதனால் ஆயிரக் கணக்கான பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இன்று காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

    இதேபோல் வேதாரண்யத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு உப்பு ஏற்றி செல்லும் பணிகளும் பாதிப்படைந்தது.  இன்று லாரிகள் மூலம் வெளி ஊர்களுக்கு 
    உப்பு லோடு கொண்டு செல்லப்பட்டது.
    Next Story
    ×