என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலத்தில் கடையில் ரூ.15 ஆயிரம் திருடிய ஊழியர் கைது
சேலத்தில் கடையில் ரூ.15 ஆயிரம் திருடிய ஊழியரை பொலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி டி.வி.எஸ். அருகே துணிக்கடையின் ஒரு பகுதியில் சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) செயல்பட்டு வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த துலுக்கன்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரியதுரை (வயது 26) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த கலெக்சன் பணத்தில் ரூ.15,213 திருடியதாக தெரிகிறது. இதுபற்றி கடஇயின் கேசியர் முருகன் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி பெரிய துரையை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்பு பெரியதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






