என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு
    X
    கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு

    ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்

    ஈரோடு மாவட்டத்தில் தமிழகஅரசின் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக பங்கேற்று திறந்து வைக்கிறார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழகஅரசின் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக பங்கேற்று திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதில் முடிவுற்ற பணிகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இதில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் கட்டப்பட்ட தேர்தல் அலுவலக கட்டிடம் மற்றும் சில பள்ளி கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

    இதைத் தொடர்ந்து தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.  இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். 

    முதல்-அமைச்சரால் தொடங்க வேண்டிய பணிகள், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய திட்ட பயன்கள் குறித்து இறுதி செய்தனர்.

    மேலும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய பணிகள், பயனாளிகள் பட்டியல், கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ள நிலையில் அவர்களை அழைத்து வந்து, அழைத்து செல்வது குறித்து முடிவு செய்தனர். 

    இதன்படி, ஈரோடு பரிமளம்மஹால், குருசாமிகவுண்டர் மண்டபம் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பயனாளிகளை தங்கவைத்து திட்டபயன்கள் வழங்க திட்டமிடப்பட்டது.
    Next Story
    ×