என் மலர்
உள்ளூர் செய்திகள்

அபராதம்
மாமல்லபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்- உரிமையாளர்களுக்கு அபராதம்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதாகவும், அதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடப்பதாகவும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதாகவும், அதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடப்பதாகவும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினரின் மேற்பார்வையில் மாமல்லபுரம் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டன.பின்னர் பேரூராட்சி திடக்கழிவு மையத்தில் பிடிபட்ட மாடுகளை கட்டி வைத்து பராமரித்து வந்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர். அபராத தொகை செலுத்திய பிறகு மாடுகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டன.
Next Story






