என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மாணவியிடம் நெருங்கி பழகி கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு:
மாணவியிடம் நெருங்கி பழகி கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவர் அந்தியூரில் டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார்.
அப்போது தனித்தேர்வர் பயிற்சிக்கு வந்த மாணவி ஒருவரிடம் லோகநாதன் நெருங்கி பழகினார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 4-ந்தேதி லோகநாதன் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ்சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார்.
இதை ஏற்று கலெக்டர், லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் சிறையில் உள்ள லோகநாதனிடம் வழங்கினர்.
Next Story






