என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் நடவடிக்கை

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவுறுத்தியுள்ளார்
    ஈரோடு:

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவுறுத்ததியுள்ளார்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு வருகிறது. 

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாளைய தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதேசமயம் அத்தியா வசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழுஊரடங்கையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். 

    பன்னீர்செல்வம்பார்க், பஸ்நிலையம், ஜிஎச்ரவுண்டானா போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழுஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

    மாவட்டம் முழுவதும் நாளை 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

    அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×