search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் நாசர், முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்த கா
    X
    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் நாசர், முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்த கா

    கால்நடை தீவன தொழிற்சாலையை ஆய்வு செய்த அமைச்சர்கள்

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    ஈரோடு,

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் தமிழக அரசின் கால்நடை தீவன தொழிற்சாலை செயல்படுகிறது. 

    இங்கு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தயார் செய்யப்பட்டு பேக்கிங் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தீவன தொழிற்சாலையில் இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தீவன தொழிற்சாலை முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    இவர்களுடன் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆவின் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர். 

    முன்னதாக சித்தோட்டில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர்கள் நாசர், முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×