என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீரமைப்பு பணி நடைபெறும் காட்சி.
குன்னூர் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகள் உடைத்து அகற்றம்
சாலை விரிவாக்க பணியின் போது பல இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 9 மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடைக்கு ஜே.சி.பி மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்க பணியின் போது பல இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது. இதனால் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதை இடையே அந்தரத்தில் தொங்கும் பாறைகளை கம்ப்ரசர் மூலமாக உடைத்து பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெரிய ராட்சத பாறைகளை ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருந்தபோதிலும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






