என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் மூடல்
மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை, பட்டர்பால் உள்ளிட்ட பகுதிகளை மூடியது. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா பகுதியில் பொதுமக்கள் கூட்டம் காரணமாக கொரோனா அதிகம் பரவும் நிலை உருவாகியுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அங்குள்ள புராதன சின்னங்களை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மறு உத்தரவு வரும்வரை இவை மூடப்பட்டுள்ளன. இதையடுத்து தொல்லியல்துறை மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை, பட்டர்பால் உள்ளிட்ட பகுதிகளை மூடியது. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story






