என் மலர்
உள்ளூர் செய்திகள்

:நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த மக்கள்
நாமக்கல் உழவர் சந்தையில் அலைமோதிய மக்கள்.
நாளை முழு ஊரடங்கு என்பதால் நாமக்கல் உழவர் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல்:
நாடு முழுவதும் கொரோனோ 3 வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காலை காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால் பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. வியாபாரிகள் முககவசம் அணிந்திருந்தனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Next Story






