என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
தீவட்டிபட்டி அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலத்தில் இருந்து பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி வழியாக நள்ளிரவு 11. 30 மணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. பஸ் பூசாரிப்பட்டி அருகே வந்தபோது இரவுநேரம் என்பதால் சர்வீஸ் ரோடு வழியாக செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக சென்றது.
அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை நோக்கி கல்வீசினர். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் சாமியப்பன் தீவட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கல்வீசினர் என்று விசாரித்து வருகிறார்.
Next Story






