என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமான சாலை
காளையார்கோவில் அருகே குண்டும் குழியுமான சாலை
காளையார்கோவில் அருகே குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட ராகினிபட்டி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை உள்ளது. ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் கூட இங்கு வந்து செல்ல முடியாத அளவுக்கு இந்த ரோடு சேதமடைந்து கிடக்கிறது.
இதை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 20 ஆண்டுகளாக இந்த ரோடு குண்டு குழியுமாக உள்ளது. ஆபத்து மற்றும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இந்த கிராமத்திற்குள் வந்து செல்ல முடியவில்லை.
அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளோம் என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.
Next Story






