search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
    X
    வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.

    நெல்லையில் 13.86 லட்சம் வாக்காளர்கள்

    நெல்லை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலெக்டர் விஷ்ணு இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் மாவட்டத்தில் 13.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
    நெல்லை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு இன்று வெளியிட்டார்.

    அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்று கொண்டனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் மூலம் 10,981 ஆண்கள், 13,253 பெண்கள், 3-ம் பாலித் தனவர்கள் 9 பேர் என மொத்தம் 24,243 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இடமாற்றம் சென்றவர்கள், இறந்தவர்கள் இரட்டை பதிவு நீக்கம் என 1,561 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 3,583 வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் இதர திருத்தமும், 2,293 வாக்காளர்கள் முகவரி மாற்றமும் செய்துள்ளார்கள்.

    வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடம், ஊராட்சி மன்ற அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களில் வைக்கப்படும்.

    அதனை வாக்காளர்கள் சரி பார்த்து கொள்ளலாம். மேலும் 0462-1950 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×