என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படுக்கை வசதி
    X
    படுக்கை வசதி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒமைக்ரானை தடுக்க முன் ஏற்பாடுகள் தீவிரம்

    மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்படும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை மருத்துவர்கள் தயாராக வைத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த கர்நாடக பக்தர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கொரோனா தொற்று ஒமைக்ரானாக மாறும் நிலை உருவாகலாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மாமல்லபுரத்தில் அதிகளவில் கர்நாடக பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் அங்கு சுகாதார சீர்கேடாக தெருக்கள், வீதிகளில் சமைப்பது, உணவு கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவது, இயற்கை உபாதைகள் கண்ட இடங்களில் கழிப்பது போன்ற சுகாதார சீர்கேடுகளை செய்கிறார்கள். மாமல்லபுரம் பேரூராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கர்நாடக சக்தி பக்தர்களை கண்டு கொள்வதில்லை.

    இதனால் மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மேல்மருவத்தூர் பக்தர்களிடம் தொற்று அதிகரித்து வருவதால், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்படும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை மருத்துவர்கள் தயாராக வைத்துள்ளனர்.
    Next Story
    ×