search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    பட்டா குளறுபடியை நீக்க லஞ்சம் கேட்ட செங்குன்றம் துணைதாசில்தார் ‘சஸ்பெண்டு’

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூட்டு பட்டாவில் உள்ள குளறுபடிகளை நீக்க லஞ்சம் கேட்ட துணை தாசில்தார் சம்பதை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
    திருவள்ளூர்:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்குன்றம் மண்டலத்திற்கு துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சம்பத். இவரிடம் கடந்த வாரம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட்டு பட்டாவில் உள்ள குளறுபடியை நீக்க அணுகினார்.

    அப்போது துணை தாசில்தார் லஞ்சம் கொடுத்தால் பட்டாவில் உள்ள குளறுபடியை நீக்கம் செய்து தரப்படும் என்று கூறியதாக தெரியவருகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுபற்றி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி இருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து கூட்டு பட்டாவில் உள்ள குளறுபடிகளை நீக்க லஞ்சம் கேட்ட துணை தாசில்தார் சம்பதை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இச்சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×