search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி காஞ்சிபுரம் கலெக்டர்  அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் காய்கறிகள் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க கோரியும், மழையின் போது வேலை,  வருமானயின்றி உள்ள ஏழை குடும்பத்திற்கும் மற்றும் இருளர், இன மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை  எழுப்பப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் நேரு, நிர்வாகிகள் பெருமாள், சங்கர், லிங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×