search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே உலர வைக்கப்பட்டுள்ள கொப்பரைகள்.
    X
    பல்லடம் அருகே உலர வைக்கப்பட்டுள்ள கொப்பரைகள்.

    கொப்பரை கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்லடம்,பொங்கலூர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது .
    பல்லடம்:

    பல்லடம் வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னை விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளதால் இந்தாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. 

    விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைய துவங்கியுள்ளது. கொப்பரை விலையும் குறைந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களில் கொப்பரை கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தென்னை விவசாயி வாவிபாளையம் வெங்கடாசலம் கூறியதாவது:

    பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் அதிக அளவில் ஆட்கள் தேவைப்படாத தென்னை விவசாயம் செய்து வருகிறோம் .

    இந்த நிலையில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னை விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளதால் இந்தாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைய துவங்கியுள்ளது. 

    கொப்பரை விலையும் குறைந்துள்ளது. கொப்பரை விலை சரிவை தவிர்க்க அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கடந்த ஆண்டு ஒரு கிலோ கொப்பரை ரூ.120 க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.90க்குவிலை போகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் கொப்பரை விலை சரிந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 105.90 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 

    ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கொப்பரை கிலோவிற்கு ரூ.15 வரை குறைவாக விற்பனை ஆகிறது. எனவே தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் கொப்பரை கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×