search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஸ்ரீ கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று  35-ம் ஆண்டு குண்டம் திருவிழா  நடைபெற்றது.
    X
    திருப்பூர் ஸ்ரீ கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று 35-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது.

    திருப்பூர் கொண்டத்து வீரபத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

    பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.
    திருப்பூர்

    திருப்பூர் மேட்டுப்பாளையம்  ராமையா காலனி கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலில் 35 ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 27-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    அதன் தொடர்ச்சியாக நேற்று முரசன்சாமிக்கு பீசும் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 50 அடி உயரமுள்ள வீரபத்ரகாளியம்மனுக்கும், 30 அடி உயரமுள்ள சிங்க வாகனத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். 9 மணிக்கு  அன்னதானமும் மதியம் 12 மணிக்கு பொங்கல் பூஜையும் நடந்தது. இரவு 8 மணிக்கு பூபதி கலை குழுவினரின் சிறுவர் சிறுமியர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாளை 3ந்தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 12 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை, 1 மணிக்கு பெரியசாமியின் அருள்வாக்கு பூஜை, 3 மணிக்கு நாராயணனுக்கு கபால பூஜை, 4 மணிக்கு வீதிஉலா, 6 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல், மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல் போன்றவையும் நடைபெற உள்ளது. 

    இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு இன்னிசை  நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×