என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    ஒப்பந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்த 147 பேருக்கும் இதுவரை ஊக்க ஊதியம் கிடைக்கவில்லை. இதை கண்டித்தும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் கூடுதல் இயக்குநர் அசோக்குமார் பேச்சுவார்ததை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தார்.

    Next Story
    ×