என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோலப்பொடிகளை ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்.
திருப்பூரில் கோலப்பொடி விற்பனை அமோகம்
காலமிட்டு பழக்கம் இல்லாதவர்கள் பழகும் வகையில் கோல அச்சு விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.
திருப்பூர்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கிறது. இதுபோல் தற்போது மார்கழி மாதம் என்பதால் பஜனைக்கும் பலர் சென்று வருகிறார்கள்.
இவ்வாறு இந்த மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகவும் இருப்பதால் பலரும் வீடுகளில் கோலமிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். திருப்பூர் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் வியாபாரிகள் பலர் கோலப்பொடிகளை விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர்.
இந்த கோலப்பொடிகளை பெண்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இதுபோல் கோலமிட்டு பழக்கம் இல்லாதவர்கள் பழகும் வகையில் கோல அச்சு விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.
Next Story






