என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பனி படர்ந்த புல் தரையையும், கார் மீது பனி படர்ந்து உள்ளதையும் படத்தில் காணலாம்.
ஊட்டியில் கடும் பனிப்பொழிவு - தேயிலை செடிகள் கருகின
By
மாலை மலர்30 Dec 2021 11:51 AM GMT (Updated: 30 Dec 2021 11:51 AM GMT)

ஊட்டியில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் ஊட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா கால கட்டுப்பாட்டுக்கு பிறகு நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில் தற்போது ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவித்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் ஊட்டியில் 2 டிகிரி பதிவாகியது.
இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலை குந்தா, பார்சன், மஞ்சூர் மற்றும் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் காலை நேரத்தில் பனி கொட்டுகிறது. கடந்த 2 நாட்கள் முன்பு தலை குந்தா பகுதியில் கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் நீரோடை ஒன்று உறைந்தது.
குறிப்பாக ஊட்டி அருகே சோலூர் தேயிலை தோட்டம் மற்றும் அங்கர்போர்டு, பைக்காரா, சிங்கார பகுதியில் தேயிலை தோட்டங்களில் பனி பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருக தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளார்கள்.
ஊட்டியில் காலையில் வெயிலும் மாலையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெப்ப ஆடைகளை அணிந்துகொள்வதோடு, ஜெர்க்கின், மப்ளர் ஆகியவற்றை வாங்குகின்றன. இதனால் அந்த வியாபாரம் சூடுபிடித்து உள்ளது. மேலும் ஊட்டி மக்கள் தீ மூட்டி குளிரை சமாளித்து வருகிறார்கள்.
ஊட்டியில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×