என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
கே.செட்டிப்பாளையத்தில் சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
By
மாலை மலர்30 Dec 2021 7:41 AM GMT (Updated: 30 Dec 2021 7:41 AM GMT)

தூரத்துக்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அவிநாசி:
அவிநாசியில் இருந்து திருப்பூர் வழியாக அவிநாசிபாளையத்துக்கு 31 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை பயணிக்கிறது. இந்தநிலையில் மருத்துவ கல்லூரி, பலவஞ்சிபாளையம் பிரிவு அருகில் இருந்து கே.செட்டிபாளையம் வரை இரண்டு கி.மீ., தூரத்துக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து 41 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய நெடுஞ்சாலை, மாநகராட்சி அதிகாரிகள் இரு வாரங்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் சாலையை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என எச்சரித்தனர்.
காலக்கெடு நிறைவு பெற்று ஒரு வாரம் கடந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து கே.செட்டிபாளையம் முதல் அய்யம்பாளையம் பிரிவு வரை 200 மீ., தூரத்துக்கு சாலையின் இருபுறமும் ஐந்தடி தூரத்துக்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சாக்கடை கால்வாய் மேல் போடப்பட்டிருந்த சிலாப்பு கற்கள், கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கான்கிரீட், சிமென்ட் தரைத்தளம் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் வியாபாரிகள் தாங்களே முன்வந்து பொருட்களை எடுத்துக் கொண்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.
மேற்கண்ட பகுதியில் இனி ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அகலமாக சாலை காட்சியளிக்கிறது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×