என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூரில் கோமாரி நோயால் 10 மாடுகள் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவ குழுவினர் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம் உள்ளிட்ட பகுதி யில் உள்ள மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
  திருப்பூர்:

  திருப்பூர் நெருப்பெரிச்சல், வாவிபாளையம், தோட்டப்பாளையம், மண்ணரை, கூலிபாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

  தற்போது மழைக்காலம் முடிந்த நிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நோயின் தாக்கம் அதிகரித்து கடந்த சில நாட்களில் வாவிபாளையத்தில் 5 மாடு, 2 கன்று, 4 ஆடு, கணக்கம்பாளையத்தில் 2 மாடு, கூலிபாளையத்தில் 3 மாடு என 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் பூலுவபட்டி, கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஆனந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் கால்நடை அதிகமாக வளர்க்கப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் 1998ம் ஆண்டு கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. தொடர்ந்து பூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது.  

  கோமாரி நோய் கோடை மற்றும் மழை காலங்களில் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கால்நடை துறை சார்பில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவது வழக்கம். 

  கடந்த 1 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாடுகளுக்கு போட வேண்டிய தடுப்பூசி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடுவது தடைப்பட்டுள்ளது. 

  வழக்க மாக போடப்படும் தடுப்பூசி போடப்படாததால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மாடுகளுக்கு தேவையான கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 
  Next Story
  ×