என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அவிநாசி ஒன்றியத்தில் மனை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவிநாசி சூளை முதல் சேவூர் வரை சென்டர் மீடியனில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
  அவிநாசி:

  அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு துணைத் தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

  முத்துசாமி: எல்.அன்.டி. குடிநீரை சுழற்சி முறையில், சீராக வழங்க வேண்டும். தொழிற்சாலைக் கழிவு, உணவு விடுதியின் இறைச்சிக் கழிவு உள்ளிட்டவை சாலையோரம், நீரோடையிலும் இரவு நேரங்களில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.

  இதனைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிக்கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கார்த்திகேயன்: அவிநாசி சூளை முதல் சேவூர் வரை சென்டர் மீடியனில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். 

  அவிநாசி ஒன்றியத்தில் மனை வரன்முறைப்படுத்த (டிடிசிபி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  சேதுமாதவன்: பழங்கரை ஊராட்சியில் இடிந்த கட்டிடத்தில் செயல்படும் தபால் நிலையம், நூலகக் கட்டடம் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானப் பகுதிக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.

  அய்யாவு: டெங்கு பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும். கிராமபுற சாலைகளில் முக்கிய இடங்களில் வேகத் தடை அமைக்க வேண்டும். குப்பாண்டாம்பாளையம், துலுக்கமுத்தூர் பகுதியில் உள்ள மயானங்களுக்கு சாலை அமைத்துத் தர வேண்டும்.

  ஜெயந்தி ராஜேந்திரன்: தெக்கலூர் சூரிபாளையம், செங்காளிபாளையம் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும். 

  ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் ஒன்றியக் குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
  Next Story
  ×