என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தத்தெடுப்பு கிராமத்தில் மாணவர்கள் தூய்மைப்பணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முகாமின் 2-ம் நாளில் கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
    அவிநாசி:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., அலகு 2 சார்பில் தத்தெடுப்பு கிராமமான அவிநாசி, கருமாபாளைத்தில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது.என்.எஸ்.எஸ்., அலகு 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். 

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கருமாபாளையம் ஊராட்சி தலைவர் பூங்கொடி, துணைத்தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் குப்புசாமி, மெஜஸ்டிக் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மயில்சாமி, ஓய்வு பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ரங்கசாமி, பேராசிரியர் முஸ்தாக் ஆகியோர் பங்கேற்றனர். பின் மாணவர்கள் கிராமத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.  

    முகாமின் 2ம் நாளில் கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. தனியார் கண் மருத்துவமனை துணை மேலாளர் ராஜூ மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
    Next Story
    ×