search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கணினி ஆசிரியர்கள் புகாரால் ஸ்தம்பிக்கும் சேவை மையம்

    பொதுவான கோரிக்கையாக ஏற்று முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்
    திருப்பூர்:

    தனியார் பள்ளி போலவே அரசு துவக்கப் பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்வதால் தமிழகத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என ஆசிரியர் சங்கத்தினர் 10 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் முதல்வரின் ‘1100’ என்ற குறைதீர் எண்ணுக்கு நூதன முறையில் தங்கள் கோரிக்கையை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்:

    தினமும் 5 ஆயிரம் வீதம் கடந்த 3 நாட்களாக புகார் தெரிவித்து வருவதால் ‘1100’ சேவை மையமே ஸ்தம்பித்துள்ளது. பொதுவான கோரிக்கையாக ஏற்று முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றார்.
    Next Story
    ×