search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு

    போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருக்க வேண்டும்.
    திருப்பூர்:

    2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர் உடனே தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட குழு மூலம் தடுப்பூசி செலுத்தவில்லையென தெரியவந்தால் அவர்கள் விபரம் அறிவிப்பு பலகையில் ஓட்டப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து மண்டல மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:

    போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு சில பணியாளர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரிகிறது. 

    இவர்கள் அவ்வப்போது நடக்கும் முகாமில் பங்கேற்று கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொள்ள வேண்டும். 

    மாவட்ட குழு ஆய்வின் மூலம் தடுப்பூசி செலுத்தாதது தெரிய வந்தால் அவர்கள் விபரம் கிளை தகவல் பலகையில் அறிவிப்பாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்:

    அரசு துறை பணியில் உள்ளவர்களில் எவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். யார் செலுத்தவில்லை என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க துறைசார் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைத்து பணிமனை கிளைகளில் பணியாற்றுபவர், டிரைவர், நடத்துனர் உள்ளிட்டோர் 2 தவணை தடுப்பூசி செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×