என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மடத்துக்குளம் பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட தொடங்கியுள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அருகே மேற்கு நீலம்பூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கும், உடுமலைக்கும் சென்று சிகிச்சை பெற்று திரும்பினர். தற்போது மீண்டும் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

    இதில் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்மகாய்ச்சல் குறித்து பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட தொடங்கியுள்ளது. டெங்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சமாக உள்ளது. இதோடு இந்த கிராமத்தில் இருந்து பல ஊர்களுக்கும் மக்கள் சென்று திரும்பி உள்ளனர். 

    இதனால் மடத்துக்குளம் பகுதி முழுவதும் விழிப்புணர்வும் நோய் தடுப்பு நடவடிக்கையும் சுகாதாரத்துறையினர் எடுக்க வேண்டும். 

    இவ்வாறு மக்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×