search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னத்தூர் குளம்.
    X
    குன்னத்தூர் குளம்.

    கழிவுகளை கொட்டும் இடமாக மாறிய குன்னத்தூர் குளம்

    வீட்டில் உள்ள கழிவுகள், கட்டிட கழிவுகளையும் குளத்தில் கொட்டி பாழ்படுத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    குன்னத்தூர் அருகே உள்ள குளம் 10 கி.மீ., சுற்றளவு உள்ள மக்களின் நீராதாரமாக உள்ளது. பரவலாக மழை பெய்த காரணத்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

    சுற்றுப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் இருந்து கழிவுகள் எடுத்து வந்து குளத்துக்குள் கொட்டப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள கழிவுகள், கட்டிட கழிவுகளையும் குளத்தில் கொட்டி பாழ்படுத்தி வருகின்றனர். 

    ஏற்கனவே 400 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம், குட்டை போல் சுருங்கியுள்ளது. குட்டையில் இறந்த ஆடு, மாடுகளை புதைப்பது, கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் குட்டையும் காணாமல் போகும் நிலை உள்ளது-. 

    எனவே பொதுப்பணித்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நீராதாரமாக விளங்கும் குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொங்கலூர் அடுத்த அலகுமலை ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் பி.ஏ.பி., வாய்க்கால் அருகே பல ஆண்டு பழமையான ஏராளமான மரங்கள் உள்ளன. அங்கு மயானம் மற்றும் பொது இடம் உள்ளது. பி.ஏ.பி.,க்கு சொந்தமான நிலமும் இதில் அடக்கம்.

    பி.ஏ.பி., யில் தண்ணீர் வரும் போதெல்லாம் நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி அந்த இடமே சோலைக் காடாக வளர்ந்து நிற்கிறது. அந்த இடத்தில் வெளியூர் நபர்களுக்கு வருவாய் துறையினர் பட்டா வழங்கியுள்ளனர்.  

    இதனால் அங்கு பழமையான ஏராளமான மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளது. ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக மரங்களை வேரோடு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறையினர் மரங்களை அகற்றி சோலை காடுகளை அழிப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எங்கள் உயிரைக் கொடுத்தாவது மரங்களை காப்போம்‘ என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  
    Next Story
    ×