search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புனரமைப்பு திட்டம் - திருப்பூர் கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

    கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டு வழக்கில் திருப்பூர் பட்டி விநாயகர் கோவிலும் சேர்க்கப்பட்டிருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் அருகே பழமை வாய்ந்த பட்டி விநாயகர் கோவில் உள்ளது. தனி அமைப்பினர் கோவிலை பராமரித்து வந்தனர். 

    பிறகு இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோவிலை இடித்து திருப்பணி செய்து கடந்த 2015ல் கும்பாபிஷேகம் நடந்தது.

    ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    கோவில்களின் தொடர் பராமரிப்பு நிலைமை குறித்து அறிக்கை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் திருப்பூர் பட்டிவிநாயகர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டு வழக்கில் திருப்பூர் பட்டி விநாயகர் கோவிலும் சேர்க்கப்பட்டிருந்தது.

    அதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 கோவில்களை பார்வையிட்டு கோவில்களில் தற்போதைய பராமரிப்பு குறித்து கமிஷனர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி திருப்பூர் பட்டி விநாயகர் கோவிலையும் ஆய்வு செய்து வளாகத்தில் உள்ள 11 கடைகளின் வருவாய் விவரங்களையும் அறிக்கையாக பெற்று சென்றுள்ளார் என்றனர்.

    இந்தநிலையில் அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ள கோவில் திருப்பணி பட்டியலில் பல்லடம் வட்டார கோவில்கள் இடம் பெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் 551 கோவில்கள் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவில்களின் பழமை மாறாமல் புனரமைத்தல், புதுப்பித்தல், மற்றும் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தொல்லியல் துறை மற்றும் மாநில, மண்டல அளவிலான வல்லுனர் குழுவின் பரிந்துரைப்படி திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 

    இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் உட்பட காங்கயம், பொன்னிவாடி, ஊத்துக்குளி, கன்னிவாடி, நல்லூர், கொடுவாய், ஆதியூர் என 17 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதில் பல்லடத்தில் ஒரு கோவிலும் இடம் பெறாதது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது. 

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:

    பல்லடத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் பக்தர்கள் பங்களிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    பழமையான, கடைவீதி மாகாளியம்மன், பாலதண்டாயுதபாணி, அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்டவற்றை புனரமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கோர்ட்டு உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் திட்டங்கள் கைவிடப்பட்டன. 

    அரசு சார்பில் கோர்ட்டில் உரிய விளக்கம் அளிக்கப்படாததால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களும் புனரமைக்கப்படாமல் கிடக்கின்றன.

    அரசு அறிவித்த பட்டியலில்  பல்லடத்தில் உள்ள ஒரு கோவிலும்கூட வராதது வருத்தம் அளிக்கிறது. பழமையான கோவில்களை பாதுகாக்க விரைவில் புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×