search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டத்தில் 92.9 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - இன்று 777 இடங்களில் முகாம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 92.9 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று 777 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 16 லட்சத்து 7 ஆயிரத்து 2 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 92.9 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கின்றனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் 100 சதவீதமும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 99 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.

    மேலும் மாவட்டம் முழுவதும் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு தினமும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 777 இடங்களில் முகாம் அமைத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.

    தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா பரவுவதால் இதுவரை முதல், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×