search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூலனூர், குண்டடம் பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

    நூலகர் பணிக்கு மேல்நிலைக் கல்வி மற்றும், அலுவலக மேலாண்மைப் பணிகளில் ஒன்று முதல் 3 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    திருப்பூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மூலனூர், குண்டடம் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

    திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மூலனூர், குண்டடம் மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடத்தில் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தொகுப் பூதியத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ம்வகுப்பு தேர்ச்சி, தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி, மேல்நிலை அல்லது பட்டப்படிப்பு, கணினியில், அலுவலக மேலாண்மைப் பணிகளில் ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஊதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

    நூலகர் பணிக்கு மேல்நிலைக் கல்வி மற்றும், அலுவலக மேலாண்மைப் பணிகளில் ஒன்று முதல் 3 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல, அலுவலக உதவியாளர்பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதற்கு ஊதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும். தோட்டக்காரர் பணிக்கு 8-ம் வகுப்பு நிறைவு செய்திருப்பதுடன், தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஊதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும்.

    ஆகவே மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம், அறை எண் 521, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×