என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பிரதமருக்கு கடிதம் அனுப்பும் திருப்பூர் மாணவர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்மாதம் இறுதிக்குள் அனைத்து அரசு, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களை கொண்டு 75 லட்சம் தபால் கார்டு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  நாடு முழுவதும், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி தொடங்கிய இந்த கொண்டாட்டம் அடுத்தாண்டு ஆகஸ்டு 15-ந்தேதி வரை நடக்கிறது. 

  இதற்காக நாடு முழுவதும் 75 முக்கிய இடங்களில் இதுதொடர்பான விழாக்கள் நடைபெற உள்ளன. அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தபால்துறை புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.

  இம்மாதம் இறுதிக்குள் அனைத்து அரசு, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களை கொண்டு 75 லட்சம் தபால் கார்டு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

  இதுகுறித்து திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கலைச்செல்வி கூறுகையில்: 

  பெரிதும் அறிமுகம் ஆகாத விடுதலை போராட்ட வீரர்’, மற்றும் ‘என் பார்வையில் இந்தியா 2047’ ஆகிய இரு தலைப்புகளில் மாணவர்கள் எழுதி தபால் கார்டினை பிரதமருக்கு அனுப்ப வேண்டும்.

  திருப்பூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் தபால் கார்டுகள் விற்பனையாகியுள்ளது. மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார்.
  Next Story
  ×