search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு கொடுக்க வந்தவர்கள்.
    X
    மனு கொடுக்க வந்தவர்கள்.

    உடுமலையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

    மைய தடுப்புகளின் நடுவில் உடுமலை நகராட்சியின் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் பிரசித்தி பெற்ற தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. 

    இந்த கோவிலில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நோன்பு சாட்டப்பட்டு 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

    அப்போது பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோவில் பகுதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு தளி ரோடு, வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி வழியாக கொல்லம் பட்டறை பகுதியில் பொள்ளாச்சி ரோட்டில் திரும்பி தேர் நிலைக்கு வந்து சேரும். தேரோட்டத்தை காண உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். 

    இந்த நிலையில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மைய தடுப்புகளின் நடுவில் உடுமலை நகராட்சியின் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின்கம்பங்களில் கம்பத்தின் இரண்டு புறமும் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலையின் நடுவில் மையத்தடுப்பு பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவது தேரோட்டத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்று இந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளனர். 

    அதேசமயம் மின்விளக்குகளை சாலையில் இரண்டு புறங்களிலும் ஓரமாக அமைக்க கேட்டுக் கொண்டுள்ளனர். 

    இதுசம்பந்தமாக உடுமலை நகராட்சி ஆணையாளரை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர்கள் பபீஸ், சதீஸ், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.

    Next Story
    ×