என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
கீழ்வேளூர் கடைத்தெருவில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
கீழ்வேளூர் கடைத்தெருவில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் கடைத்தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.இதுகுறித்து கீழ்வேளூர் கிராம நிர்வாக அலுவலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






