என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்
  X
  பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

  காஞ்சிபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்த 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சிபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்த 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து அதிகாரிகள் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

  அப்போது அங்கு 250 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரிசி, 150 மூட்டை பாலிஷ் செய்யப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

  இதே குடோனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

  அதே நபர் மீண்டும் ரேசன் அரிசி பதுக்கலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×