என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  முசிறியில் கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டம் முசிறியில் கஞ்சா விற்க முயன்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  முசிறி:

  முசிறி குளித்தலை பெரியார் பாலம் அருகே முசிறி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்தையன் வாகன சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், 800 கிராம் கஞ்சா பொட்டலம் ஒன்று, 4 கிராம் பாக்கெட் 12, காலி பிளாஸ்டிக் பைகள் 50 மற்றும் எடை மிஷின் இருந்தது.

  இதுகுறித்து வண்டியை ஓட்டி வந்த நாமக்கல் போதுப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த கணேசன் மகன் தினேஷ் குமார் வயது 19 என்பவரை விசாரித்ததில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து வழக்கு பதிவு செய்த முசிறி இன்ஸ்பெக்டர் விதுன் குமார், தினேஷ் குமாரை கைது செய்து மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றார்.
  Next Story
  ×