search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    பச்சிளம் குழந்தைகள் உள்பட 11 பேருக்கு டெங்கு பாதிப்பு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பச்சிளம்குழந்தைகள் உள்பட 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் தண்ணீர் தேங்கி காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பல்கி பெருகி வருகின்றன. குறிப்பாக நல்ல தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகஅளவில் பெருகி நோய்களை பரப்பி வருகின்றன.

    இந்த கொசுக்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த முறை ராமநாதபுரம் மாவட் டத்தில் சிறுவர்களை அதிகஅளவில் டெங்கு காய்ச்சல் பாதித்து வருகிறது. வெளியில் விளையாடும்போது இது போன்ற கொசுக்கள் கடித்து காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு மாவட்டத்தில், ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த 6 மாத பச்சிளம்குழந்தை மற்றும் அவரின் அக்காள் 4 வயது சிறுமி, மண்டபம் மீனவர்காலனியை சேர்ந்த 7 மாத குழந்தை, ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்கு 5 வயது சிறுவன், திருவாடானை கோனகிரிகோட்டையை சேர்ந்த 23 வயது நபர், பெரிய ஓரிக்கோட்டை மாதாகோவில் பகுதி 13 வயது சிறுவன், கீழக்கரை கிழக்குத்தெரு 3 வயது சிறுமி, அவரின் 16 வயது அண்ணன், ராமநாதபுரம் ஜோதிநகர் 2-வது தெரு 11 வயது சிறுவன், தேவேந்திரர் நகர் 7 வயது சிறுமி, சித்தார் கோட்டை பனைவாடி தெரு 44 வயது நபர் என 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.

    இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் இதில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும் பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை இலக்க எண் அளவில் இருந்து வந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிகரித்து வரும் டெங்கு கொசுக்களை உடனடியாக ஒழிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×