என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் சேவையை பயன்படுத்த இளைஞர்களை ஊக்குவிக்க அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில், செல்போன் ஆப் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயந்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில், செல்போன் ஆப் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் வாக்காளர் சிறப்பு முகாம் நாளில் வந்து விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர். வாக்காளரின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் வழியாக வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் கோரி விண்ணப்பிக்க ஊக்குவிக்க வேண்டும்.
வருங்காலங்களில் ‘கருடா’ செல்போன் ஆப், ‘nvsp’, ‘voter helpline’ போன்ற சேவைகளை பயன்படுத்த இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆன்லைன் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






