என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த டிரைவர் பலி

    ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து டிரைவர் பலியானார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் கிராமத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்தார்.

    இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றார்.

    பின்னர், ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி சதீஷ்குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அப்போது உயிருக்கு போராடிய அவரை மீட்க ஆள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பலியாகி கிடந்த சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×