என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  காட்பாடியில் மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல்- 50 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காட்பாடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வேலூர்:

  காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தில்ஷாத், இளங்கோவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் குடியாத்தம் காட்பாடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

  இது பற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×