என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  கீழ்பென்னாத்தூர் அருகே கார் மோதி ராணுவ வீரர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  கீழ்பென்னாத்தூர்:

  கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (70). முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினர் சுரேஷ். 2 பேரும் நேற்று பைக்கில் திருவண்ணாமலை சென்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பி வந்தனர்.

  அப்போது கடம்பை, சிறு கொத்தான் பகுதியில் அம்மன் கோவில் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சின்னதம்பி, சுரேஷ் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் சின்னதம்பி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×